Wednesday, June 17, 2009
எங்கிருந்து வந்தாயடா?
ஏதும் உறவில்லை என்ற போதும்
ஏதோ உவகை என்னுள் உன்னால்
உந்தன் பாதங்கள் மண்ணை முத்தமிட்டது
என்றறிந்ததும் என் மனதில்
மகிழ்ச்சி வெள்ளக் காடு!
மண்ணை முத்தமிட்ட உன் மலர்ப் பாதங்கள்
இன்று நிமிர்ந்து நிற்கவும்,
தத்தை நடை பயிலவும்
இதோ ஓராண்டு இன்றோடு இனிதே நிறைவுறுகிறது!
வாழ்வில் இது போல்
இன்னும் பல ஆண்டுகள் நீ
வளம் பல பெற்று வாழ்ந்திட
இறையருள் வேண்டுகிறேன்!
ஏதும் உறவில்லை என்ற போதும்
ஏதோ உவகை என்னுள் உன்னால்!
எங்கிருந்து வந்தாயடா?
பி. கு 1: எனது "குட்டி நண்பன்" அனீஷ் - இன் பிறந்த நாள் இன்று. அவருக்காக தான் இந்த குட்டிக் கவிதை.
பி. கு 2: நம்ம கண்ட நாள் முதலாய் Truth அவர்களுக்கும் கூட இன்னைக்கு தான் பிறந்தநாள்.. அவரையும் வாழ்த்தலாம் வாங்க...
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அனிஷ் மற்றும் ட்ருத் ஆகிய இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
ரொம்ப நன்றி புன்னகை, என்னையும் என்னுடைய மாப்பிள்ளையையும் வாழ்த்தினதுக்கு. படமும், கவிதையும் பிரமாதம்.
@$anjaiGandh!,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
**********
@Truth,
இரண்டு பேருமே நெருங்கிய நட்பு வட்டாரம், நான் சொல்றது உங்களையும், அனிஷையும் தான் :-)
நன்றி எல்லாம் எதுக்கு??? :-)
மிக்க நன்றி. எனது மகனின் புகைப்படத்தை கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன். உங்கள் கவிதையையும் ரசித்தேன் . உங்கள் கவிதைதிரன் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
@sujatha,
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா!
**********
@Manu,
கற்பனை வளம் எல்லாம் ஒன்னும் இல்லை. நீங்க ஆனாலும் கொஞ்சம் அதிகமாத் தான் புகழுறீங்க, என்ன பன்றது, தங்கைப் பாசம் இருக்கத் தானே செய்யும்! :-)
cute baby
Post a Comment