Thursday, June 25, 2009

லேடிஸ் சீட்

'மேலை நாடுகளில் பேருந்துகளில் ஆண் பெண் என்று தனியே இருக்கைகள் ஏதும் கிடையாது. ஆயினும் அங்கே பெண்களுக்கு இருக்கை இல்லாமல் போகும் பட்சத்தில் ஆண்கள் தங்களது இருக்கையைத் தாமாகவே முன்வந்து பெண்களுக்கு அளிப்பர்' என்று யாரோ என் பிஞ்சு மனசுல நஞ்சக் கலந்து விட்டுட்டாங்க குழந்தைப் பருவத்துல. அந்த விஷயம் உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது, ஆனால் அப்படியிருத்தல் நலம் என்பது மனதின் எண்ணம்.

நம்ம சிங்காரச் சென்னையில் கூட, பேருந்து இருக்கைகளுக்கு மேல் 'பெண்கள்' என்று எழுதப்படிருக்குமே தவிர, 'ஆண்கள்' என்று எங்கும் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. பெண்களுக்கும், ஊனமுற்றோர் முதியோர் ஆகியோருக்கு மட்டும் தான் தனித்து எழுதப்பட்டிருக்கும். ஆக, இவ்வாறு குறிக்கப்பட்டுள்ள இருக்கைகள் தவிர மற்றவை எல்லாம் பொதுவானவை என்று தானே பொருள் கொள்ள வேண்டும்? ஆனால், பொதுவான இருக்கைகள் யாவும் ஆண்கள் இருக்கைகள் என்று எழுதாச் சட்டமாகவே இருந்து வருகின்றது நம் ஊரில்.

குறைந்தது ஏழு பேர் அமரக் கூடிய கடைசி இருக்கையின் மேலே 'பெண்கள்' என்று எழுதப்பட்டிருந்தாலும் கூட, அங்கே அமரும் ஆண்களுக்கு அதைப் படித்தறியும் அளவுக்கு எழுத்தறிவில்லை போலும் என்று தோன்றும் பல நேரங்களில் எனக்கு. அவர்களுக்கு எழுத்தறிவித்து இறைவன் ஆவோம் என்று பல நேரங்களில் முயன்று, வெற்றியும் பெற்றுள்ளேன் என்பது தனிக்கதை. அதை இங்கு அலசப் போவதில்லை.கடைசி இருக்கையில் அமர்ந்திருக்கும் ஆண்களில் பலர் பெண்கள் பேருந்தினுள் ஏறுவதைக் கண்டவுடனே எழுந்து அவர்களுக்கு இடமளிப்பதைக் கண்டிருக்கிறேன். இன்னமும் மனிதம் செத்துப் போகவில்லை என்று மனதினுள்ளே மக்திழ்ந்தும் உள்ளேன்.

சிலர் மட்டும் ஏனோ மக்களின் மத்தியில் மாக்களாகவே வாழ விழைகின்றனர். பெண்களைக் கண்டதும் அத்தனை நேரம் விழிதிருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்திற்குப் போவதும், திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போவதும் தினம் காண்கின்ற அற்பக் காட்சிகள்! "காசு குடுத்து டிக்கட் வாங்கியிருக்கேன், என்னால எழுந்துக்க முடியாது" என்றெல்லாம் வீர வசனம் பேசும் 'கெட்ட' பொம்மர்கள் பலர் உண்டு. ஆண்களை மட்டும் குறை கூறிப் பயனில்லை. நம் பெண்களும் கூட கொஞ்சம் கூட யோசிக்காமல், "அவருக்கு உடம்பு சரியில்லைம்மா" எனும் போது, உதடுகள் துடிக்கும் "அப்போ நீங்க உங்க இடத்தை அவருக்குக் குடுக்க வேண்டியது தானே" என்று கேட்க. "ஆம்புளைங்க சீட்ல நீங்க மட்டும் உக்காருறீங்க? அப்போ நாங்க என்ன உங்கள எழுந்திருக்கவா சொல்றோம்?" என்று ஒரு அறிவுப்பூர்வமான(?) கேள்வி வேறு வரும் பல தருணங்களில்.

இத்தனைக் குமுறல் எதற்கு என்று நீங்கள் முகம் சுளிப்பது புரிகின்றது! எல்லாம் சோக ராகம் தான். தினமும் காலையில் மூன்று அல்லது நான்கு பேருந்துகள் மாறி தான் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் நான். இன்று காலை ஏறிய முதல் பேருந்தில் கூட்ட நெரிசல் அவ்வளவாக இல்லை என்ற போதும் இருக்கைகள் ஏதும் இல்லை. என்னருகே ஒரு வயதான பெண்மணியும் ஏற, பெண்கள் இருக்கையில் அமர்ந்திருந்த இரு ஆண்களைப் பார்த்து "ladies seat" என்று சொன்னதற்கு, நான் ஏதோ புரியாத பாஷையில் பேசியது போல் முகத்தை வைத்தனர் இருவரும். "இது லேடிஸ் சீட், கொஞ்சம் எழுந்துக்குறீங்களா?" என்று கேட்ட பிறகும் அதே குழப்பப் பார்வை.

இவர்களிடம் பேசி அர்த்தமில்லை என்றுணர்ந்து, சற்று தள்ளி நின்று கொண்டேன். அந்த வயதான பெண்மணி, "கொஞ்சம் எழுந்துக்கோயேன்பா, வயசானவங்க நிக்குறோம்ல?அந்தப் பொண்ணு கூட சொல்லுச்சுலப்பா?" என்றதும், "இப்படிப் பணிவாச் சொன்னா எழுந்துக்கப் போறோம், அத விட்டுட்டு?" என்றதும் எனக்கு வந்தது கோபம்! எனது உரிமையை நான் பெற இவர்களிடம் நான் எதற்குப் பணிந்து போக வேண்டும்? வந்த கோபத்தையெல்லாம் எனக்குள்ளயே மறைத்து விட்டு, பேருந்தின் முதல் இருக்கையை நோக்கி நகர்ந்து விட்டேன். என்ன செய்றது, "துஷ்டனைக் கண்டால் தூர விலகு" அப்படினும் சொல்லிக் குடுத்து வெச்சிருக்காங்களே!

பி. கு: திரைப்படம் ஒன்றில் வரும் வசனம் தான், இருப்பினும் என்னை மிகவும் ஈர்த்த வசனங்களில் ஒன்றிது: "Just because you are strong, you cant use force!"

17 comments:

Manu said...
This comment has been removed by a blog administrator.
கலையரசன் said...

அருமையா இருக்கு, அட மெய்யாலுமே!
தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!

ஓட்டும் போட்டாச்சு..

நிலாவும் அம்மாவும் said...

சரி போன போறாங்க....முதுகெலும்பு இல்லாத ஜென்மங்க..

இங்க எந்த அம்பிளையும் எழுந்து இடம் குடுக்குறது இல்ல பெண்களுக்கு....

பிள்ளதாச்சிக்கும் , குழந்தை வச்சுகிட்டு கஷ்டப் படுரவங்களுக்கு கண்டிப்பா இடம் குடுப்பாங்க

sujatha said...

Ur script was excellent.
It made me to think "Tamizh mozhikku itthanai azhaghaa"
I could very well understand ur problem. Its better u learning driving to overcome these difficulties.

Juliet said...

Hey ur message was nice......
The way of tamil writing is also good.....
All the men should know that how to react with ladies.....
namma yen namma urimaiya vidukudukanum....( This is very nice )

பவானி ஷங்கர் said...

நீங்க சொல்றது எல்லாம் சரிதான். லேடீஸ் சீட் காலியா இருந்தும் ரெண்டு பொண்ணுங்க வந்து இருக்குற ரெண்டே ரெண்டு பொது( ஆண் சீட்டுன்னு சொல்லல) சீட்ல உட்கார்ந்தா என்ன செய்ய? பொண்ணுங்க சீட் காலியா இருக்கு. இருந்த ரெண்டு பொது சீட்லயும் பொண்ணுங்க உட்கார்ந்தா நான் கண்டிப்பா நின்னுனு தான் போயாகனும். இது மாதிரி எத்தனையோ முறை எனக்கு நடந்திருக்கு. இத பத்தி என்ன சொல்றீங்க?

Subash said...

பதிவு போட நல்ல காரணம் பிடிச்சிருக்கீங்க. நல்ல வேள எங்க இடத்தில இப்படியெல்லாம் சீட் பிரிவினை இல்ல.

ஆனாலும் உண்மையில் முடியாதவங்களுக்குத்தான் எங்க சீட்ட எழும்பி குடுப்போம். எங்க வயசு பெண்களுக்கு சீட் குடுக்கறதில் இருக்கிற சிக்கல்ஸ்-

1. நான் அந்தப்பொண்ணக்காக வழியிறேன்னு மத்தவங்க சீப்பா பாப்பாங்க. அது கவலையே இல்ல, யாரு நினச்சா எனக்கென்ன?
2. பக்கத்தில இருக்கிற நண்பனுக்கு நோண்டி பண்ண ஒரு காரணம் கிடைக்கும். பரவால்ல. நாளைக்கு அவனுக்க நானும் கலாய்க்கலாம்.
3. நேரடியாக சம்பந்தப்பட்ட அந்த பெண். நாம எழும்பி சீட் குடுத்தா ஏதொ அவங்கள பார்த்து நல்ல போர் வாங்கறத்துக்குத்தான் நாம சீட் குடுக்கறோம்னு நினச்சு ஒரு பார்வ பார்ப்பாங்களே. அதுக்காக இப்ப அப்படி பண்றதேயில்ல. சிலர் மட்டும் ஒரு ரியாக்சனும் இல்லன்னாலும் முகத்திலேயே நன்றி சொல்றமாதிரி இருக்கும். சிலவங்கதான் இப்படி ஹெல்ப் பண்றதையே ஓவரா போட்டு குழப்புவாங்க. அதையே பிறகு கிளாசிலோ வெளியிலோ அவங்களுக்கு இடம் குடுத்த வழிந்தவனு பேரும் குத்துவாங்க.

என்ன பண்றது!!!

சண்டைபிடிக்கறதா நினைக்கவேண்டாம். அட்லீஸ்ட் ஒரு எதிர்ப்பின்னுட்டமாவது இருக்கணுமில்லையா?
எழுதும் விதம் சூப்பர். வாழ்த்துக்கள்.

Selvaraj said...

நீங்கள் ஆங்கிலத்திற்கு பதில், அழகிய தமிழில் சொல்லியிருக்கலாம்! அவர்கள் ஒருவேளை தமிழ் பிரியர்களாக இருந்திருக்கலாம். அதற்காகவே எழும்ப்பாமல்கூட இருந்திருக்கலாம். லண்டனில் பெண்களுக்கென இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை. ஆனால் ஊனமுற்றவர்களுக்கும் வயதானவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Kanthimathi said...

முதலில் விதிமுறைகள் என்றிருந்தால் அதை மதிக்க வேண்டும் என பள்ளியிலேயே மாணவர்களை பழக்க முற்பட வேண்டும். Montessori அம்மையார் இவைகளை முன்னிறுத்தி பாடங்களை வகுத்திருக்கிறார்.

வெளிநாடுகளில் வேறொருவர் முறைப்பரோ என்ற கவலை இல்லாமல் தானாக எழுந்து இடம் கொடுப்பது மனித இயல்பாக அமைந்து விடுகிறது.

KATHIR = RAY said...

Pengale Vayathanavarkalukkum Pulla thaachi penkalukkum kulandai vaichu irukara penkalaukkum seat kodukka marukkum pothu. aankal pathi kutham soldrathu artham illa.

வயதான வாலிபன் said...

நல்ல பதிவு.முதலில் ஏறும் பெண்கள் எல்லாம் பொது இருக்கையில் அமர்ந்து கொண்டால் (அரசு பணியில் பெண்களுக்கு பொது பிரிவில் இடம் இல்லை என்றால் தான் பெண்கள் கோட்டாவில் கொடுப்பது போல்)பின்னால் வரும் பெண்களுக்கு எளிதில் இடம் கிடைக்கும்.ஆண்களுக்கு என்றுதான் எதுவும் கிடையாதே.

புன்னகை said...

@Manu,
ஆண்களை மட்டும் தாக்கி எழுத வேண்டும் என்பதல்ல என் எண்ணம். உங்களைப் போன்ற ஆண்கள் இருக்கத் தான் செய்கின்றனர், இல்லை என்று சொல்லவில்லை. உங்களுக்கு என் வாழ்த்துக்களும் கூட.
//நிஜமாய் கூற வேண்டும் என்றாள், ஒரு ஆண் போல இரக்க குணம் உள்ள ஒரு உயிரனத்தை இந்த பிரபஞ்சத்தில் சந்திப்பது கடினம்.//
என்னால சிரிக்காம இருக்க முடில. உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப இருக்கும் போல. :-)


**********

@கலையரசன்,
வருகைக்கும், வாக்களித்தமைக்கும் நன்றி!

**********

@நிலாவும் அம்மாவும்,
//முதுகெலும்பு இல்லாத ஜென்மங்க//
சரியாச் சொன்னீங்க! பல நேரங்கள்ல இப்படி தான் நினைக்கத் தோனுது. அவங்க வீட்டுப் பெண்கள் இப்படிக் கஷ்டப்பட்டாக் கூட இவங்க எல்லாம் சும்மா தான் இருப்பாங்களானு தெரில.

**********

@sujatha,
உங்க வேலைகளுக்கு மத்திலயும் படிச்சு, பின்னூட்டமும் போடுறதுக்கு ரொம்ப நன்றி அக்கா. உங்களோட மாணவர்களுக்கு மனித நேயம் பத்தியும் சொல்லிக் குடுங்க, வருங்காலத்திலாகிலும் இந்த அவலம் மாறட்டும்.

**********

@Juliet,
நிஜம் தானே? நம்ம உரிமைய எதுக்காக மத்தவங்களுக்காக விட்டுக் கொடுக்கணும்? உனக்கு தான் என்ன நல்லாத் தெரியுமே! :-)

**********

@பவானி ஷங்கர்,
நீங்க சொல்றதும் சரி தான். ஆனா, பெண்கள் இருக்கை காலியா இருக்கும் போது, நீங்க அந்தப் பெண்களிடம் சொன்னால், கண்டிப்பா இடம் தருவாங்கன்னு தான் நான் சொல்லுவேன். வேறொரு சந்தர்ப்பத்தில் முயற்சி செய்து பாருங்களேன்?

புன்னகை said...

@Subash,
"கடமையைச் செய், பலனை எதிர்பாராதே" ---> நம்ம கீதைல சொன்னது தாங்க. அடுத்தவங்க என்ன பேசுவாங்களோனு யோசிக்க ஆரம்பிச்சோம்னா, நாம வாழ்றதேக் கஷ்டமாகிடும்ங்க! ஆக, உங்க மனசுக்கு சரின்னு தோனும் விஷயத்த செயல்படுத்துங்க.

**********

@Selvaraj,
''கொஞ்சம் எழுந்துக்குறீங்களா?" ---> இது தமிழ் தானங்க??? மனிதமற்ற அவர்களுக்குக் கண்டிப்பாக மொழியுணர்வு இருக்க எள்ளளவும் கூட வாய்ப்பில்லை என்பதே என் கருத்து.

**********
@Kanthimathi,
சரியாச் சொன்னீங்க. இப்பொழுது வளர்ந்து வரும் தலைமுறையிடமாவது இந்த மாற்றம் ஏற்பட வேண்டும் என்று தான் நானும் நினைக்கிறேன்.

**********
@KATHIR = RAY,
நான் ஆண்களை மற்றும் குற்றம் சொல்லலைங்க. பொதுவாத் தான் சொல்ல வரேன். நீங்க பதிவ இன்னொரு முறை படிச்சீங்கனா, உங்களுக்கே அது விளங்கும். எனக்கு நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு சொன்னதால, உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் வந்திருக்கு போல.


**********
@வயதான வாலிபன்,
இது உங்களது யோசனையா அல்லது மனக்குமுறலா என்று புரியவில்லை எனக்கு! இருந்தாலும் நல்ல யோசனை தான் குடுத்திருக்கீங்க. ஆனா, ஆப்படி நாங்க பொது இருக்கைல அமர்ந்தாலும், அதுக்கும் உங்க ஆளுங்க வாளெடுத்துட்டு சண்டைக்கு தானே வருவாங்க? :-)

VISA said...

:) ithu matum thaan intha pathivukku. samuthayathai keali paesum entha pathivukum ithu thaan pathil . yeanentraal ingu irupathu oru samuthaayamea illai. vignanam valarntha kaadu avalavea.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஆனாலும் நீங்க ரொம்ப ஸாஃப்ட்னு நினைக்கிறேன்.

பொதுப்பிரிவில் அமர்ந்திருக்கும் நீண்ட தூரம் செல்லும் ஆண்களை சிறிது தூரத்திற்காக எழுப்பிவிட்டு கொடுமை செய்வதை என்னவென்று சொல்வது?

புன்னகை said...

@VISA,
வருகைக்கு நன்றி!

**********

@ஆதிமூலகிருஷ்ணன்,
//ஆனாலும் நீங்க ரொம்ப ஸாஃப்ட்னு நினைக்கிறேன்.//
இன்னுமா இந்த உலகம் நம்புது? ;-)
பொதுப் பிரிவில் அமர்ந்து செல்லும் ஆண்களைப் பற்றி ஒன்னும் சொல்றதுக்கு இல்லைங்க ஆதி. ஆனா, பெண்களுக்கான இருக்கைல அமர்ந்துட்டு, எழுந்துக்க சொல்லும் போது ஏதோ இவங்க சொத்துல பாதிய நாம எழுதித் தர சொன்னது போல ஒரு பார்வை பார்ப்பாங்க இல்ல, அப்போ தான் எரிச்சல் வரும்!

மீடில் ஈஸ்ட் முனி said...

Comparing to the first and last para of your post my friend, there are conflicts in the post and real world. For example, in the western part of the world the usage of pleasant words is still in practise...and the ladies ask for their rights very politely pleasantly with a smile ...!!!! For example " if u dont mind my friend i am too tired can i sit here " or " sorry bro, i believe u didnt notice that this seat is allocated for ladies so if u dont mind can i sit here " or " sir, can u please find another seat as this is allocated ladies " this is how it works out in the western part of the world as far as i know. So even in the western part of the world when u just say " hey this is ladies seat " the reply would be "@#$% off loser" !! This is the ground reality . I can understand you may think why do u need to be polite when others or not... but end of the day only you end up in standing all the way not others who was sitting. But my friend, can u please tell me have u ever noticed " a young woman giving away her seat " when a old man standing next to her ??? or when a women leaves her seat for someone else except the exceptional cases like pregnant womens and kids.. No way ... becoz they will not and they themself call as weaker sexes " nan oru pombalai" " pombalainu kuda parkama " etc etc...!! have u ever seen a man trying to ask a women who is sitting in a general seat to move to ladies seat... !!! Sometimes if the man is only under the influence of drugs/alchohol...isnt it true??? Has any women thinks whether the other man also has to take 4 to 5 buses to his work ? how tired will he be after coming from one whole day work ??? If they do ..and when such things happens ...yes i am sure the things like in western part of the world may happen in india..... So please face the world and try to flock together !!! after all we are no humans these days but social animals !!!