Thursday, September 23, 2010

கார்க்கியின் பிறந்த நாள் கொண்டாட்டம்!

இன்று பிறந்த நாள் காணும் நமது பதிவுலக சூப்பர் ஹீரோ கார்க்கிக்கு உள்ளம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!

இணைய தளபதியின் பிறந்த நாள் நேற்று தானே என்று புருவம் உயர்த்தி யோசிப்பர்வகளுக்காக இந்த அறிவிப்பு. இத்தனை ஆண்டுகளாக, செப்டெம்பர் 23ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடி வந்த இவர், தற்பொழுது, வீட்டில் திருமணத்திற்காக ஜாதகத்தைப் புரட்டிய பொழுது தான் இவரின் உண்மையான பிறந்த தேதி செப்டெம்பர் 24 என்று தெரிய வந்துள்ளது. ஆக, இனி தனது பிறந்த நாளை செப்டெம்பர் 23ஆம் தேதியன்று அனைவருடனும் கொண்டாடிவிட்டு, உண்மையான பிறந்த நாளான செப்டெம்பர் 24ஆம் தேதியன்று தனது தோழியுடன் மட்டும் தனிமையில் கொண்டாட திட்டமிட்டுள்ளார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. எது எப்படியோ, நாம வாழ்த்திட்டு போய்டுவோம்.

இவ்வாண்டு இவரது "தோழி"யும் கூட பிறந்த தேதியில் ஏதோ குழப்பம் என்று, மறுநாள் தான் பிறந்த நாள் கொண்டாடினார் என்பது உங்கள் அனைவருக்கும் ஒரு extra scoope! :-)

4 comments:

சுசி said...

இங்கேயும் வாழ்த்துக்கள் கார்க்கி.

Anonymous said...

வாழ்த்துக்கள் கார்க்கி :)

Thamira said...

எப்டில்லாம் சிந்திக்கிறாங்கப்பா..

கார்க்கிபவா said...

சுசி, பாலாஜி நன்றி

ஆதியண்ணே.. ம்ம்

புன்னகை, எப்படிங்க உங்களுக்கு நன்றி சொல்றது? என்னவோ போங்க