Monday, February 23, 2009

என்ன தவம் செய்தனை!

21 பிப்ரவரி 1986

கணவனை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு, வெள்ளிக்கிழமை பூஜை வேலைகளை விறுவிறுப்பாக செய்து கொண்டிருந்தாள் மலர், அன்று எப்படியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேத் தீரவேண்டும் என்ற நினைப்போடு. அவளுக்கு இது இரண்டாவது பிரசவம். திருமணம் முடிந்த அடுத்த வருடம் ஒரு பெண் குழந்தையை அவள் ஈன்றெடுத்ததால், இப்பொழுது மொத்த குடும்பமும், முத்து-மலர் தம்பதியினர்க்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில். இவளது ஐந்து வயது மகள் லாவண்யாவும் கூட "எங்க தம்பி பாப்பா இன்னும் கொஞ்ச நாள்ல வருவானே" அன்று பார்ப்பவரிடமெல்லாம் பெருமை பொங்க சொல்லத் தொடங்கிவிட்டாள்.

வீட்டிலிருந்த பெரியவர்களெல்லாம், நெருங்கிய உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட, துணைக்கு இருக்கட்டும் என்று பக்கத்து வீட்டுப் பெண்மணியை அழைத்துக்கொண்டு போய் அன்று மாலையே அரசு மருத்துவமனையில் சேர்ந்தாள் மலர். "எல்லாரும் வரதுக்குள்ள உனக்கென்ன மா அவசரம்?" என்று மெய்யான கோபத்தோடு அவளைக் கடிந்து கொண்டார் அவளது தந்தை. "நாங்க வந்த பிறகு நாங்களே உன்ன கூட்டிட்டு வந்திருக்க மாட்டோமா?" என்றார் அவளது தாய். "குழந்தை பிறக்க வேண்டிய தேதி முடிஞ்சு ஏற்கனவே 11 நாள் ஆகுது. என்ன அவசரம்னு ரொம்ப சாதாரணமா கேக்றீங்க?" என்றாள் கொஞ்சம் கவலையோடு. முதல் குழந்தையைப் போல் இந்தக் குழந்தையும் சுகப்பிரசவத்தில் பிறக்க வேண்டுமே என்ற கவலை அவளுக்குள்.

மருத்துவர் அவளின் உடல்நிலையைப் பரிசோதித்துவிட்டு, "இன்னைக்கு நைட் வரைக்கும் வெயிட் பண்ணுவோம், அப்படி இல்லனா நாளைக்குக் காலைல 8 மணிக்கு ஆபரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்கணும்" என்று சொல்லிவிட்டார். இருக்கின்ற செலவுகள் போதாதென்று இப்பொழுது ஆபரேஷன் செலவு வேறா என்று மனதிற்குள் இன்னொரு கவலையும் புகுந்து கொண்டது மலருக்கு. "ஹீரோயின் இன்ட்ரோ ஷாட் இப்படி தான் கொஞ்சம் விறுவிறுப்பா இருக்கும், நீங்க கொஞ்சம் அமைதியா இருங்கமா" என்று குழந்தை சொன்னது அவளுக்குக் கேட்காமலே போனது.

22 பிப்ரவரி 1986

விடியற்காலை 4.15 மணிக்கெல்லாம் பிரசவ வலி எடுக்க, பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அப்பொழுதும் கூட பெரியவர்கள் யாரும் இல்லாத நிலையிலும், மிகவும் தைரியத்துடன் தான் இருந்தாள். வயிற்றினுள் இருந்து "நான் இருக்கேன் அம்மா உன் கூட" என்று குழந்தை கூறியது அவளுக்குக் கேட்டது போலும். விடியற்காலை 4.40 மணிக்கு 3.2 கிலோ எடையில் ஒரு "குட்டி தேவதையைப்" பெற்றெடுத்தாள். அவளுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் அவளைப் பார்த்து "உன் பொண்ணு record break செய்திருக்காமா" என்றார். மயக்கத்தில் ஒன்றும் புரியாது விழித்தவளைப் பார்த்து, "நான் பார்த்த பிரச்சவத்திலேயே பிறந்த முதல் பெண் குழந்தை இவ தான்" என்றார்.

"இது தான் முதல் குழந்தையா?" என்று வினவிய மருத்துவரிடம் "இல்ல ரெண்டாவது குழந்தை" என்றதும், "முதல் குழந்தை என்ன?" என்று மருத்துவர் மற்றொரு கேள்வியைத் தொடுக்க, "பெண் குழந்தை" என்று மெல்லிய குரலில் சொன்னாள் மலர். "அச்சிச்சோ, ரெண்டாவதும் பொண்ணா? அப்போ இந்த பாப்பாவை எனக்கு தரியா?" என்று மருத்துவர் கேட்க, ஒரு பூச்செண்டு போன்றிருந்த குழந்தையைப் பார்த்தவாறே, "மாட்டேன்" என்று தலை ஆட்டிவிட்டு மயங்கினாள்.

22 பிப்ரவரி 2009

நள்ளிரவில் என் அறைக்கதவு தட்டப்படும் காரணமறிந்து கதவைத் திறந்தேன். "ஹாப்பி பர்த்டே அம்மு" என்று சொல்லி, அம்மா என் நெற்றியில் அழுந்த ஒரு முத்தம் வைத்தாள். புன்னகையுடன் சோம்பல் முறித்த என் கையைப்பற்றி அப்பா பிறந்த நாள் வாழ்த்து சொன்னார். அதற்குள் அக்கா வந்து, என்னை அணைத்து கன்னத்தில் முத்தமொன்றை வைத்து, "ஹாப்பி பர்த்டே டி பாப்பு" என்றாள். "நானும் பா, ப்ளீஸ் ப்ளீஸ்" என்று என்னைக் கிண்டலடித்தபடி மாமா வர, நான் குடுத்த ஒரு "டெரர் லுக்"-இல் அவர் அமைதியாக, சிரிப்பலைகள் எதிரொலித்தது என் வீட்டில்.

நான் பிறந்து, இதோ இருபத்திமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட "இரண்டும் பெண் குழந்தையாப் போச்சே" என்று என் பெற்றோர் வருத்தப்பட்டு நான் கண்டதில்லை. உங்களுக்கு "ரெண்டும் பொண்ணு தானா? ஒரு பையன் கூட இல்லையா?" என்று மிகுந்த அக்கறையுடன்(?) விசாரிப்பவர்களிடம், "எங்களுக்கு ரெண்டு பொண்ணு!" என்று பூரிப்புடன் அவர்கள் சொல்வதைத் தான் இன்னமும் பார்க்கிறேன்.

அம்மா பல தருணங்களில் "ஈன்ற பொழுதின் பெரிது உவந்திருக்கிறாள்". "இவள் தந்தை என் நோற்றான்" என்று இப்பொழுதும் கூட அப்பாவைப் பார்த்து பொறாமைப்படுபவர்களும் உண்டு. "தங்கச்சி பாப்பா வேண்டாம், தம்பி பாப்பா தான் வேணும்" என்று அன்று மொட்டை மாடியில் அலறி அழுதவள், இப்பொழுதெல்லாம் ஒரு நிமிடம் என் முகம் வாடினாலும், உள்ளம் நொந்து போகிறாள். அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகமாகி அதனால் சோர்ந்து போனாலும், வீட்டிற்குள் நுழையும் போது முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக்கொண்டு தான் செல்வேன். இல்லையெனில், அக்காவின் "அன்புத் தொல்லை" சொல்லி முடியாது :-)

"என் வீட்டைப் பார், என்னைப் பிடிக்கும்" என்று பெருமையோடு சொல்லும் அளவிற்கு, இப்படியொரு அன்பான குடும்பத்தில் பிறந்த என்னைப் பார்த்து அடிக்கடி நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி ஒன்று மட்டும் தான். என்ன கேள்வியா? தலைப்பைப் பாருங்க, உங்களுக்கே புரியும் :-)

22 comments:

Unknown said...

enga di indha madhri elam ezhudha kathukita? first of al, frm wer do u get time???
anyways a nice one
n belated bday wishes to my kutty (ramya) thangachi

புன்னகை said...

@onatop,
ஒரு விஷயத்தை எப்படியும் செய்யணும்னு முடிவு பண்ண பிறகு, அதுக்கான நேரத்தை நாம கண்டிப்பா ஒதுக்க முடியும்! இது, நான் பதிவுகள் எழுத ஆரம்பிச்ச பிறகு உணர்நத விஷயம். ஆக, பதிவெழுத நேரம் நிறைய தான் இருக்கு. ஒரு நாளுக்குக் குறைந்தது 4 முதல் 5 மணி நேரம் பயணத்தில் தானே போகுது எனக்கு. அப்பப்போ மனதில் தோன்றும் விஷயங்களை சேர்த்து வைத்து தான் எழுதுறேன்.
நீங்க யாருன்னு தான் கண்டுபிடிக்கவே முடியல :-( ஒரு மின்னஞ்சல் அனுப்புங்களேன் உங்க பெயர் போட்டு! உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

புன்னகை said...

@Manu,
//முதலில் ஒரு பெண்ணானவள் தனது வயதை இவ்வளவு தைரியமாகவும், வெட்கமில்லாமலும் சொல்வதை நினைத்து பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது//
இது வஞ்சப்புகழ்ச்சி ஏதும் இல்லையே? :-)
இரண்டு வரிகளுக்கு மேல எழுத முடியலைனா என்ன? ஒரு ஹைக்கூ கவிதையாச்சும் போடுங்களேன், படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். கையெடுத்து எல்லாம் கும்பிட வேண்டாம், நான் உங்கள விட ரொம்ப சின்னப் பொண்ணு :-)

Anonymous said...

மாதவம் புரிந்தவளோடு
மனதோடு பேசுகையில்
பதிவில் என் கருத்தை
பதிய தேவையுண்டோ?

அங்கு பெயருக்காக
உயிருடன் வாழும் உயிருடன்
இங்கு பெயரையே மெய்யாக்கி பொய்யாக
இயங்குபவனின் முதல் கிறுக்கல்

Truth said...

நல்லா இருக்கு.
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

புன்னகை said...

@Anony,
//Nice//
இதுவே காட்டிக் குடுத்திடுச்சு நீங்க யாருன்னு :-)
உங்கள் கிறுக்கலும் கூட
கவிதையாய்த் தான் தோன்றுகிறது
இது காதலின் பிழையானதால்!

புன்னகை said...

@Truth,
உலகத்துல என்னென்னவோ அதிசயங்கள் நடக்குது. அதுல இதுவும் ஒன்னா என்ன??? :-)
வருகைக்கும வாழ்த்துக்களுக்கும் நன்றி! :-)

புன்னகை said...

@Manu,
நான் பாராட்டக் கூடாதுனு சொன்னாலும் நீங்க கேட்கப் போறதில்ல, பிறகென்ன? நடத்துங்க! ;-)

Arasi Raj said...

nalla irukku :)

ப்ரியா கதிரவன் said...

Too good!

புன்னகை said...

@Nilavum ammavum,
நன்றி! :-)

புன்னகை said...

@ப்ரியா,
//Too good!//
இதப் பாத்ததும் தல கால் புரியல எனக்கு!!! "நன்றி" மட்டும் தான் சொல்லத் தோனுது! நல்ல வேலையா இன்னைக்கு காலர் வெச்ச சுடிதார் போட்டு இருக்கேன். "ப்ரியா என் பதிவுக்கு கமெண்ட் போட்டு இருக்காங்க" அப்படின்னு பெருமையா காலர தூக்கி விட்டு சொல்லிக்க வசதியா இருக்கு! :-)

ny said...

de collar comment abov z cooler!!

Maddy said...

பிரியா ப்ளோக்ல கமெண்ட் பார்த்துட்டு இங்க வந்தேன். முதலில் பெயருக்கு தகுந்தார் போல எப்போதும் புன்னகை அணிந்து மகிழ்ந்திருக்க வாழ்த்துக்கள்.

பெண்குழந்தை ஒரு பொக்கிஷம், வரம். எந்த தந்தையும் மனதில் கொள்ளும் சுகம்!!! உங்கள் அப்பாவிற்கு ரெட்டை சந்தோசம் இல்லே. உங்கள் அன்பு என்றென்றும் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் கிடைக்கட்டும். நீங்கள் சொன்ன வார்த்தைகளை அவர்களும் சொல்லட்டும் எப்போதும்

புன்னகை said...

@kartin,
:-)

புன்னகை said...

@Maddy,
//நீங்கள் சொன்ன வார்த்தைகளை அவர்களும் சொல்லட்டும் எப்போதும்//
கண்டிப்பா சொல்லுவாங்க, அந்த நம்பிக்கை நிறையவே இருக்கு.

Anonymous said...

dont lie, enga sutta ethai.......unnai maniratnam,,, vendam james camaron ellana speelsberg kitta recomend panren....

Ananthi said...

hey ramya
ur blog is so touching
good
on reading that it is as if we are also part of your family
too good

romba feel pani irruka

Raich said...

Hi Ramya,
First of all Belated B'day wishes..
I was a bit busy with my work so unable to read ur blog immediately.
There is some magic in ur writings.
The way you depict things, which brings out all the emotions one can actually feel it.
Romba nalla ezhuthureenga.

புன்னகை said...

@Katz,
எங்க சுட்டேன்னு சொன்னா, நீங்களும் சுடத் தொடங்கிடுவீங்களே? அதனால "இது என் சொந்தக்கதை" தான். அந்த ரெகமன்டேஷன் விஷயம், ஏதும் செய்ய முடிஞ்சா ரொம்ப நல்ல இருக்கும். எத்தன நாள் தான் நம்ம ஆபிஸ்-ல "global warming" செய்றது? ;-)

**********

@Ananthi,
Thanks :-)

**********

@Raich,
//Romba nalla ezhuthureenga//
இன்னுமா இந்த உலகம் நம்புது??? ;-)

Anonymous said...

உண்மையைச் சொல்லட்டுமா?

உங்கள் மீதும், உங்கள் எழுத்துக்கள் மீதும் பொறாமையாய் இருக்கிறது. மிகவும் நன்றாக இருக்கிறது பதிவு.

என்ன தவம் செய்தனை இத்தகைய பெற்றோர் கிடைத்ததற்கு. அவர்களுக்கு என் அன்பும், மரியாதையும்.

புன்னகை said...

@வெயிலான்,
வருகைக்கு நன்றி! :-)