Wednesday, August 4, 2010

புன்னகை பேசுகிறேன்...

நானே பாவமா என் பொழப்ப மட்டும் பார்த்துட்டு, உங்கள எல்லாம் தொல்லை பண்ணாம இருந்தேனா? இந்த சுசி அக்கா சும்மா இல்லாம, ஒரு தொடர் பதிவுக்கு இழுத்து விட்டுட்டாங்க! நாம எல்லாம் பெரியவங்கள மதிக்கத் தெரிந்தவங்க இல்லையா? வருவேன் வருவேன் கட்டாயம் வருவேன்னு அவங்களுக்கு வாக்கு வேறு குடுத்தாச்சு. அதான் பதிவெழுதலாம்னு திரும்ப வந்துட்டேன்! Start music!!! :-)

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
புன்னகை

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
"புன்னகை - விடை இல்லாக் கேள்விகளுக்கும் மௌனத்திலும் தரக் கூடிய ஆழமான பதில்!"
இது என்றோ ஒரு நாள் மனதில் தோன்றியது. எங்கும் உபயோகிக்க வாய்ப்பில்லாமல் போனதால், புன்னகை பதிவுலகில் எனது பெயரானது. (நாம எழுதுறது பாதிப் பேருக்குப் புரியாது, பாதி நமக்கே புரியாது. ஆக, புன்னகை, யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் மொழி என்று சொல்லி சமாளிக்க வசதியாக இருக்கும் என்பதாலும் இந்தப் பெயர்!) அப்பா, அம்மா வைத்த பெயர், அழகு என்று பொருள் கொண்ட, அழகான பெயர் - இரம்யா.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...
ஹி ஹி ஹி... பெரிய கதை, கொஞ்சம் குட்டியா சொல்லி முடிக்க முயற்சிக்கிறேன். எங்க ஊர் சாலைகள் மீது இருந்த கடுப்பில் ஏதோ ஒன்றை எழுதினேன். அதை நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொண்ட பொழுது, அவர் தான் பதிவு எழுதும்படி இப்படி தள்ளிவிட்டார்! (அப்போ ஆரம்பித்தது உங்க எல்லாருக்கும் ஏழரை!)

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
ஒன்னுமே இல்லீங்க! (Basically, i dont like publicity!)

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
என்னுடைய அனைத்துப் பதிவுகளுமே, "சொந்தக் கதை சோகக் கதை" வகைகள் தான்! உண்மையச் சொல்லணும்னா, நான் ரொம்ப சுயநலவாதி. ஆக, என் உலகம் எப்பொழுதும் என்னையும் என்னைச் சார்ந்தவர்களைச் சுற்றி மட்டுமே சுழலும்! பின்விளைவுகள் ஏதும் பெரியதாக இருந்திருக்கவில்லை இதுவரை. (Touch wood!!!)

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பதிவுகளின் மூலம் சம்பாத்திக்க முடியும் என்பதே இந்தக் கேள்விக்குப் பின் தான் எனக்குத் தெரியும். (Green baby!) பொழுதுபோக்காக மட்டும் தான் இதுவரையிலும் எழுதி வந்துள்ளேன். பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வலையுலகம் பெரிதும் பயன்படுகின்றது.

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்னே ஒன்னு தாங்க. (இதுக்கே கண்ண கட்டுதே!)

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
பதிவர்கள் மீது கோபம் எல்லாம் வந்ததில்ல... பொறாமை மட்டும் உண்டு. எந்த நேரமும் "புலம்பி"க் கொண்டே இருப்பவர் மீது தான் அத்தனை பொறாமையும்! இயல்பான எழுத்து நடை... படிக்கும் போது, ஏதோ நம்ம கண்ணு முன்னாடியே நடக்கிற மாதிரி ஒரு உணர்வு... அதெல்லாம் அவருடைய பதிவுகளில் நிறைய உண்டு என்பதால்!

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
பாராட்டு கிடைத்தது என்பதை விட, ஒரு நல்ல அண்ணன் கிடைத்தார் என்பதே உண்மை. என்னுடைய பதிவுகளில் பெரும்பாலும், முதல் பின்னூட்டம் இவருடையதாகத் தான் இருக்கும். ஏதோ, என்னைப் பாராட்டவே பிறவி எடுத்ததைப் போல் அவ்வளவு அன்பு! ஆனா, ஒருத்தர் மட்டும் தான், நல்லா இருந்தா நல்லா இருக்குன்னும், நல்லா இல்லைனா நல்ல இல்லைன்னும் உரிமையோடு சொல்லுவார். சில நேரங்களில் விமர்சனங்கள், விவாதங்களாகவும் மாறியதுண்டு தனி மடலிலும், தொலைபேசி அழைப்புகளிலும்.

10. கடைசியாக --- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
சொல்றதுக்கு பெருசா ஏதும் இப்போ இல்லை. திருமணம் பற்றிய செய்திகளை வரும் காலங்களில் பகிர்ந்து கொள்கிறேன். (பாவம் மனுஷன்!)

ஒரு வழியா முடிச்சாச்சு! இப்போ அடுத்தவங்களை வம்பில் இழுத்துவிடணும்ல? ஹி ஹி ஹி.... இதோ வந்துட்டேன், உங்க உயிரை எடுக்க...

ட்ரூத் (பழைய தொடர் பதிவே ஒன்னு இன்னும் தூங்கிட்டு இருக்கு)

ஆதி

கார்க்கி

ஒழுங்கா வந்து பதிவைத் தொடருங்க... இல்லைனா..... அவ்ளோ தான்...

6 comments:

கார்க்கிபவா said...

ஹிஹிஹி

ஹேஹேஹே

ஹாஹாஹா...

சுசி said...

//ஒழுங்கா வந்து பதிவைத் தொடருங்க... இல்லைனா..... அவ்ளோ தான்... //

சாமி குத்தம் ஆயிடும்.. கண்டிப்பா தொடர்ந்திடுங்க :)

பெயர் விளக்கம் சூப்பர். ரெண்டுமே அழகான பெயரா அமைஞ்சது உங்க அதிர்ஷ்டம்.

Manu said...

இயல்பான பதிவுக்கு எனது பாராட்டுகள்....

//புன்னகை - விடை இல்லாக் கேள்விகளுக்கும் மௌனத்திலும் தரக் கூடிய ஆழமான பதில்//
இப்படியெல்லாம் உங்களால எப்படி யோசிக்க முடியுது?? Coaching Class எதாச்சும் போறீங்களா?

//திருமணம் பற்றிய செய்திகளை வரும் காலங்களில் பகிர்ந்து கொள்கிறேன்//
ஓஓஓ உங்களுக்கு இன்னும் கல்யாணம் நடக்கலையா?? ஆனால் உங்களுடைய எழுத்துகள் படிக்கும்போது அப்படி தோன்றவில்லை...

நர்சிம் said...

//8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
பதிவர்கள் மீது கோபம் எல்லாம் வந்ததில்ல... பொறாமை மட்டும் உண்டு. எந்த நேரமும் "புலம்பி"க் கொண்டே இருப்பவர் மீது தான் அத்தனை பொறாமையும்! இயல்பான எழுத்து நடை... படிக்கும் போது, ஏதோ நம்ம கண்ணு முன்னாடியே நடக்கிற மாதிரி ஒரு உணர்வு... அதெல்லாம் அவருடைய பதிவுகளில் நிறைய உண்டு என்பதால்!//

வா.ஆ!

Prapa said...

ஹிஹிஹி...........................எங்களையும் அழைக்க வேணும்

Raghav said...

ஆதி, கார்க்கி இருவரின் வலைதளங்களில் இருந்து இங்கெ வந்தேன்.

என் அம்மாவின் பெயர் ரம்யா :)

உங்களயும் இனி Google reader-ல் தொடரலாம் என்ரு என்னுகிரென்

(பிழைகளை பொருத்தருள்க :) நா 4th std வர தான் தமிழ் :( )