Thursday, October 8, 2009

என்னவருக்காக...

ஆரியம் திராவிடம் என்ற வேறுபாடுகளைக் கடந்து சில விஷயங்கள் என்னை வெகுவாக ஈர்ப்பதுண்டு. அப்படிப்பட்ட ஒன்று தான் "கர்வா சௌத்" விரதமும் கூட. திருமணம் முடிந்த பெண்கள், திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்கள் என அவரவர் தத்தம் கணவருக்காக காலை முதல் கடும்விரதம் மேற்கொண்டு மாலையில் நிலவினை சல்லடை கொண்டு பார்த்து, பிறகு அவர்களின் கணவரைப் பார்த்து விரதத்தை முடிப்பர். கடும்விரதம் என்பது, தண்ணீர் கூட அருந்தாமல்! DDLJ, 7G ரெயின்போ காலனி போன்ற திரைப்படங்களில் இந்த விரதம் பற்றி பார்த்த பொழுதே இதன் மீது ஒரு பற்று ஏற்பட, கல்லூரியில் உடன்பயின்ற வட இந்தியப் பெண் அவளது ஏழாம் வயது முதலே இந்த விரதத்தை மேற்கொள்வதாகச் சொல்ல, கல்லூரி முடித்த ஆண்டிலிருந்து இந்த விரதத்தைக் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

நாம் உண்ணும் உணவில் இருக்கும் glucose-இல் ஒரு பங்கு நமதுடலில் glycogen-ஆக சேமித்து வைக்கப்படும். அது விரதம் மேற்கொள்ளும் நேரங்களிலும், உடல் நிலை சரியில்லாத நேரங்களிலும் glucose-ஆக மாற்றப்பட்டு, உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும். ஆனால் அந்த glycogen-ஐ glucose-ஆக மாற்ற தண்ணீர் தேவை. அதனால் தான் விரதமிருப்போரை அதிகமாகத் தண்ணீர் பருக வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் தண்ணீர் கூட பருகாமல் இருப்பதால், இந்த விரதத்தின் போது மிகுந்த அயர்வு ஏற்படும். இவ்விதமான அயர்வுகளில் மேலும் உடல் தளர்ந்து போகாமலிருக்க, பெண்களின் மன நிலையைச் சீராக்க, மருதாணி அணிதல் நல்லது என்ற பழக்கத்தையும் ஏற்படுத்தினர். மருத்துவ ரீதியாக, மருதாணியின் குளுமை உடல் சூட்டைத் தணிக்க வல்லது. கர்வா சௌத் விரதம் மேற்கொள்ளும் போது கையில் மருதாணி இட்டுக் கொண்டால் நல்லது என்று கூறுவது இதற்குத் தான்.

கர்வா சௌத் விரதம் மேற்கொள்வது ஒரு பெரிய விஷயம் என்றால், கர்வா சௌத் தினத்தில் நிலவைப் பார்ப்பதென்பது பகீரதத் தவம்! சாதாரண நாட்களில் மாலை ஏழு மணிக்கெல்லாம் குளிர் முகம் காட்டும் நிலவு, இரவு பத்து மணியான போதும் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க இயலாத வண்ணம் மேகங்களுக்கிடையே சென்று ஒளிந்து கொள்ளும்; நம்மையும் கொல்லும்! போதாக் குறைக்கு அன்று தான் அளவுக்கு அதிகமாக மேக மூட்டம் காணப்படும். இந்த நான்கு ஆண்டுகளில் பதினோர் மணிக்குக் குறைந்து ஒரு முறை கூட நிலவைப் பார்த்ததில்லை நான். நேற்று தான் புதிய சாதனை. இரவு 10.45 மணிக்கு அருள் புரிந்ததெனக்கு.

இன்று காலையில் அலுவலகம் வந்த பின்பு, அனைவரின் கவனமும் என் மீது தான். காரணம் உடல் நிலை சரியில்லாமல் போக, குறைந்தது ஆறு மாத காலத்திற்கு விரதம் ஏதும் இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் வலியுறுத்தியும், நேற்று நான் இந்த விரதத்தை மேற்கொண்டேன். பயணத்தின் போது அயர்வு ஏற்படலாம் என்று விடுப்பு எடுத்து வீட்டிலிருந்துவிட்டேன். இன்று அனைவரும் கேட்ட கேள்வி, "நிலவைப் பாத்துட்டு யாரப் பாத்த?" என்று. அனைவருக்கும் ஒரு புன்னகையால் பதிலளித்துவிட்டு இருக்கைக்கு வந்தேன்.

என்னவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்த பிறகு தான் அவருக்காக நான் விரதங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பிறர் கூறுவதில் எனக்குக் கொஞ்சமும் கூட உடன்பாடில்லை. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விட இது அரசியல் இல்லையே. எனக்காக வரவிருப்பவர் இன்னார், இத்தகைய குணமுடையவர் என்றெல்லாம் தெரிந்த பிறகு அவர் மீது வைக்கும் பாசம் நேசமும் அவ்வளவு உண்மையானதாக இருக்குமா என்று தெரியவில்லை எனக்கு. அதனால், அவர் இன்னார் என்று தெரியும் முன்னமே அவரை நேசிக்கத் துவங்கிவிட்டேன், அவர் எனக்கான என்னவர் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும்! இதைத்தவிர திடமான உண்மை வேறேதும் தேவையில்லை என்பதாலும். என்னவர் எங்கிருந்த போதிலும், அவரிடம் சொல்ல விழையும் செய்தி ஒன்று மட்டும் தான்...

காதலிக்கிறேன்! Truly, madly, deeply!!! :-)

23 comments:

Truth said...

me the first

Truth said...

//அவர் இன்னார் என்று தெரியும் முன்னமே அவரை நேசிக்கத் துவங்கிவிட்டேன், அவர் எனக்கான என்னவர் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும்!

அற்புதம். :-)

கார்க்கி said...

// இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விட இது அரசியல் இல்லையே. எனக்காக வரவிருப்பவர் இன்னார், இத்தகைய குணமுடையவர் என்றெல்லாம் தெரிந்த பிறகு அவர் மீது வைக்கும் பாசம் நேசமும் அவ்வளவு உண்மையானதாக இருக்குமா என்று தெரியவில்லை எனக்கு. அதனால், அவர் இன்னார் என்று தெரியும் முன்னமே அவரை நேசிக்கத் துவங்கிவிட்டேன்//

கொண்ணுட்டிங்க புன்னகை..யாரும் பின்னூட்டம் போடவில்லை எனினும் 10 ஓட்டு பாருங்க..

சூப்பர் பதிவு... உங்க அவர் நல்லா இருக்கட்டும்.. நல்லாவே இருக்கட்டும்.. நல்லாவும் இருப்பார். அது மட்டும் உண்மை..

அனுஜன்யா said...

எப்புடி இப்படியெல்லாம்....

All the very best.

@ கார்க்கி - பதிவுலக தொழில் நுட்பம் எல்லாம் அத்துப்படியா உனக்கு?

அனுஜன்யா

குப்பன்.யாஹூ said...

nice post.

Kaarki, it is not a must that whoever voted must write comment. I do vote for lot of posts but lasy to write comment (one of the reason Tamil translation font issue)

நாளும் நலமே விளையட்டும் said...

நீங்கள் உங்கள் வருங்கால கணவரை இப்போதிருந்தே காதலிப்பதாக எழுதி உள்ளீர்கள்.
அதற்கும் இந்த விரதத்திற்கும் என்ன சம்பந்தம்?
விரதங்கள் இருப்பதன் மூலம் தான் நாம் இன்னொருவரை நேசிப்பதை வெளிப் படுத்த முடியுமா?

நான் ஒருவரை நேசிப்பதை காண்பிக்க என்னை வருத்திக் கொள்ள வேண்டுமா?

இது மூட நம்பிக்கை இல்லாமல் வேறு என்ன?


இந்த பின்னூட்டம் நீங்கள் வெளி இடுவீர்களா என்று சந்தேகம் இருந்தாலும் நான் எழுதுகிறேன்.

பாரதி எந்த நாளிலும் பெண்கள் விரதம் இருக்க வேண்டிக் கொள்ளவில்லை.

கார்க்கி said...

/
பாரதி எந்த நாளிலும் பெண்கள் விரதம் இருக்க வேண்டிக் கொள்ளவில்லை//

நண்பரே, பார்தி சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு கேட்க வேண்டுமா? பாரதி எதற்காக குடித்தார்? அதில் அவருக்கு என்ன சந்தோஷம்? யாருக்கு என்ன நனமை? அவருக்கு அந்த போதை தேவைப்பட்டது..


பெண்களுக்கு தாங்கள் தன் கணவரை எப்படி காதலிக்கிறோம் என்று காட்ட ஆசைப்படுகிறார்கள். தங்களை வருத்திக் கொண்டாலும் அதனால் அவரக்ளுக்கு மகிழ்ச்சிதான். மேலும் ஒரு நாள் விரதம் இருப்பது உடலுக்கு நல்லது என்றே காந்தியும் சொல்லி இருக்கிறார்...

கார்க்கி said...

//Kaarki, it is not a must that whoever voted must write comment. //

நண்பரே, நானும் அதைத்தான் சொல்றேன். பின்னூட்டம் வரலைன்னு கவலை வேண்டாம். ஓட்டு போட்டவங்கதான் முக்கியம்னு சொல்றேன்...

விக்னேஷ்வரி said...

ரொம்ப அழகான பதிவு. வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்களவருக்கும்.

புன்னகை said...

@Truth,
வராதவங்க வந்திருக்கீங்க! ரொம்ப நன்றி! :-)

**********
@கார்க்கி,
//யாரும் பின்னூட்டம் போடவில்லை எனினும் 10 ஓட்டு பாருங்க..//
இதுக்காக வருத்தமெல்லாம் ஒன்னும் இல்லைங்க! நான் என்னோட மன நிறைவுக்காக தான் எழுதுறேன். ஆக, no heart feelings at all! :-)

**********
@அனுஜன்யா,
தானா வருதுங்க! வாழ்த்துக்களுக்கு நன்றி!
//@ கார்க்கி - பதிவுலக தொழில் நுட்பம் எல்லாம் அத்துப்படியா உனக்கு?//
ஆமா, ஆமா கார்க்கி அண்ணாக்கு இந்த விஷயமெல்லாம் அத்துப்படி! ;-)

**********
@குப்பன்.யாஹூ,
வருகைக்கு நன்றி!

**********
@நாளும் நலமே விளையட்டும்,
இது சுதந்திர நாடென்பதில் எனக்கு கருத்து வேறுபாடேதும் இல்லை என்பதால் உங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டு தான் இருக்கிறேன்!
ஒருவரின் மீதிருக்கும் அன்பை வெளிப்படுத்த அவரவர் தம்மால் இயன்றதைச் செய்வது மூட நம்பிக்கை என்று உங்களுக்குத் தோன்றினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல! மேலும், பாரதியின் மீது அபிமானம் உண்டென்ற போதிலும், எனக்கென தனி விருப்பு வெறுப்புகள் இருப்பதில் தவறொன்றும் இல்லை தானே?

**********
@விக்னேஷ்வரி,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! :-)

இவன் சிவன் said...

நல்ல பதிவு.. எனக்கு என்னவோ ரொம்ப புதுசா இருக்கு.. இந்த மாதிரி விஷயங்கள் இன்னும் ஊருக்குள் நடந்துகிட்டு தான் இருக்கா?? ...உங்களுடைய வார்த்தை பிரயோகங்கள் அருமை ... இனிமே அடிக்கடி இந்த பக்கம் வரலாம் போல இருக்கு ..வாழ்த்துக்கள்

R.Gopi said...

//"கர்வா சௌத்" விரதமும் கூட. திருமணம் முடிந்த பெண்கள், திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்கள் என அவரவர் தத்தம் கணவருக்காக காலை முதல் கடும்விரதம் மேற்கொண்டு மாலையில் நிலவினை சல்லடை கொண்டு பார்த்து, பிறகு அவர்களின் கணவரைப் பார்த்து விரதத்தை முடிப்பர். கடும்விரதம் என்பது, தண்ணீர் கூட அருந்தாமல்! //

உங்க‌ள் ம‌ன‌ உறுதி பாராட்டுத‌லுக்குரிய‌து...

//நாம் உண்ணும் உணவில் இருக்கும் glucose-இல் ஒரு பங்கு நமதுடலில் glycogen-ஆக சேமித்து வைக்கப்படும். அது விரதம் மேற்கொள்ளும் நேரங்களிலும், உடல் நிலை சரியில்லாத நேரங்களிலும் glucose-ஆக மாற்றப்பட்டு, உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும். ஆனால் அந்த glycogen-ஐ glucose-ஆக மாற்ற தண்ணீர் தேவை.//

அடேங்க‌ப்பா... இதெல்லாம் எப்ப‌வோ ப‌டிச்ச‌து... இப்போ ரெஃப்ரெஷ் ப‌ண்ணிக்க‌றேன்..

//மருத்துவ ரீதியாக, மருதாணியின் குளுமை உடல் சூட்டைத் தணிக்க வல்லது. கர்வா சௌத் விரதம் மேற்கொள்ளும் போது கையில் மருதாணி இட்டுக் கொண்டால் நல்லது என்று கூறுவது இதற்குத் தான். //

இப்ப‌டி ஒரு விஷ‌ய‌ம் இருக்கா... தெரிவித்த‌த‌ற்கு ந‌ன்றி...

//குறைந்தது ஆறு மாத காலத்திற்கு விரதம் ஏதும் இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் வலியுறுத்தியும், நேற்று நான் இந்த விரதத்தை மேற்கொண்டேன். //

உங்க‌ள் தைரிய‌மும், ப‌திப‌க்தியும் மெச்ச‌த்த‌க்க‌து...

//என்னவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்த பிறகு தான் அவருக்காக நான் விரதங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பிறர் கூறுவதில் எனக்குக் கொஞ்சமும் கூட உடன்பாடில்லை.//

ந‌ச் ஸ்டேட்மெண்ட்....

//என்னவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்த பிறகு தான் அவருக்காக நான் விரதங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பிறர் கூறுவதில் எனக்குக் கொஞ்சமும் கூட உடன்பாடில்லை. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விட இது அரசியல் இல்லையே. எனக்காக வரவிருப்பவர் இன்னார், இத்தகைய குணமுடையவர் என்றெல்லாம் தெரிந்த பிறகு அவர் மீது வைக்கும் பாசம் நேசமும் அவ்வளவு உண்மையானதாக இருக்குமா என்று தெரியவில்லை எனக்கு. அதனால், அவர் இன்னார் என்று தெரியும் முன்னமே அவரை நேசிக்கத் துவங்கிவிட்டேன், அவர் எனக்கான என்னவர் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும்! இதைத்தவிர திடமான உண்மை வேறேதும் தேவையில்லை என்பதாலும். என்னவர் எங்கிருந்த போதிலும், அவரிடம் சொல்ல விழையும் செய்தி ஒன்று மட்டும் தான்...

காதலிக்கிறேன்! Truly, madly, deeply!!! :-) //

பாராட்டுக‌ள் ம‌ற்றும் ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ள்...

கொடுத்து வைத்த‌ த‌ம்ப‌திய‌ர்க‌ள்.... நீடூடி வாழ்க‌ ந‌ல‌முட‌ன் ப‌ல்லாண்டு... அந்த‌ இறைவ‌னின் அருளுட‌ன்...

jeeva said...

நாளும் நலமே விளையட்டும் நண்பா மூடநம்பிக்கை என்பதும் தற்போது ஒரு வகை நம்பிக்கை ஆகி விட்டது நமது மக்களிடம்.ஒரு ஒரு விசயமும் அவர்களுடைய நம்பிக்கை தான். புன்னகை என்பவள் அதனை நம்புகிறாள். அவள் நம்பிக்கை பலிக்கட்டும்.

jeeva said...

நண்பா கார்க்கி, காந்தி சொன்னால் மட்டும் கண்ணை மூடிக் கொண்டு கேட்க வேண்டுமா? புன்னகை என்பவள் காதலிப்பதில் தவறு இல்லை.ஆனால் காதலிக்கும் அவனையே திருமணம் செய்து கடைசி வரை வாழ வேண்டும்.பிறகு வீட்டில் சம்மதிகவில்லை அல்லது சில காரணங்களுக்க ஏமாற்றாமல் இருந்தால் சரி.
வாழ்க வளமுடன்

கார்க்கி said...

@ஜீவா,

யார் சொல்லும் கருத்தையும் நாம் கண்ணை மூடிக் கொண்டு ஃபால்லோ செய்ய வேண்டியதில்லை சகா. ஆனால் மருத்துவர் கொடுக்கும் மருந்தை அப்படித்தான் சாப்பிட வேண்டும். நான் காந்தியின் கருத்துகளை குத்து சொல்லவில்லை. விரதம் இருப்பது மனித உடலுக்கு நல்லது. வண்டியை மெயிண்டெனென்சில் விடுவோம் இல்லையா? அப்படி. அதுவும் பெண்கள் உடலமைப்பு அபப்டிபட்டதாம். அந்த விஞ்ஞான பூர்வமான தகவலை மட்டுமே சொல்கிரேன். மற்றபடி காந்தி, பாரதி எல்லோரும் ஒன்றுதான் :)))

katz said...

Ramya, I have no words to say.....i am jumping in joy, you are my freind....is it true

jeeva said...

மருத்துவர் சொல்வதை கேட்க வேண்டும் அல்லவா. கடந்த ஒரு மாத காலமாக அவளுக்கு உடல் சரிஇல்லை. மருத்துவர் விரதம் வேண்டாம் என்று கூறி உள்ளார். மருத்துவர் கூறுவதை கேட்காமல் விரதம் இருந்தால்? என்ன சொல்வது , ஆக மருத்துவர் முட்டாளா, இதன் பெயர் தான் மூட நம்பிக்கை. இதன் போல் விரதம் இல்லாவிட்டால் சரியான கணவன் கிடைக்க மாட்டான. அவளுடைய அப்பா சரியான வரன் பார்க்க மாட்டாரா? மற்ற விசயங்களை நம்புவதற்கு பதிலாக தன் பெற்றோரை நம்ப சொல்லுங்கள்

வால்பையன் said...

உடம்ப பார்த்துகோங்க!

நாளும் நலமே விளையட்டும் said...

நீண்ட நாட்கள் கழித்து இன்று தான் மீண்டும் இந்த பக்கம் வந்தேன்.
எனது பின்னூட்டம் உங்கள் மனதை வருந்த செய்தாலும் சொல்வது எனது கடமை என்று தான் சொன்னேன்.

நாம் யாரை நேசிக்கிறோமோ அவரை மனம் உவந்து நேசித்தாலே போதும். அவருக்காக இது எல்லாம் தேவையா? உங்கள் கணவர் ஒரு வேளை இதை விரும்பாவிட்டால்?

கடவுளுக்கு விரதம் இருப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

ஒரு தாய் தன் குழந்தைக்காக பலவற்றை இழக்கிறாள்.(இங்கு இது தேவை)
இதே தாய் தனக்கு பிறக்கும் குழந்தை நன்றாக அழகாக இருக்க வேண்டும் என்று
குழந்தை வயிற்றில் இருக்கும்போதே "சஸ்டி விரதம்" இருந்தால் முருகன் போல் பிள்ளை பிறப்பான் என்று விரதம் இருந்தால்? குழந்தைக்கு ஊட்ட சத்து கிடைக்குமா?

சர்க்கரை நோய் உள்ள நண்பர் வீம்புக்காக ரம்ஜான் நோன்பு இருக்கலாமா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

கணவருக்காக என்று மட்டுமல்ல பிரியத்துக்குரியவர்களுக்காக ஏதாவது சிறப்பு உணவு தயாரித்து தற்செயலாக மீதமின்றி அவர் முழுவதும் சாப்பிட்டுவிடநேர்ந்தால் அது மீதம் இருந்து அதை உண்பதைக்காட்டிலும் மகிழ்வைத் தரக்கூடியதுதானில்லையா?

அதுபோலவே பிரியமானவர்களுக்காக தம்மை வருத்திக்கொள்வதும் மகிழ்வானதுதான். இது ஆண்களுக்கும் பொருந்தும்.

ஆனால் துணைவர் வருமுன்னரே அவருக்காக இதைச்செய்வது உங்கள் அன்பைக்காட்டிலும் வாழ்க்கை மீதான உங்களின் ரசனையைக் காட்டுகிறது. வாழ்த்துகள் உங்களுக்கு.!

(நிஜத்தில் வந்த பின் என்ன நடக்கும் என நினைத்துப்பார்க்கிறேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்...)

புன்னகை said...

@இவன் சிவன்,
கண்டிப்பாக வரவும்.

**********
@R.Gopi,
வழக்கம் போல் பதிவைப் பிரித்து போட்டு மேய்ந்திருக்கிறீர்கள். உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி.

**********
@jeeva,
//வாழ்க வளமுடன்// ---> ரொம்ப நன்றி!

**********
@katz,
Free eh விடுங்க! சில நேரங்களில் சில மனிதர்கள்! ;-)

**********
@வால்பையன்,
அன்பிற்கு நன்றி!

**********
@நாளும் நலமே விளையட்டும்,
அறிவுரைக்கு நன்றி!

**********
@ஆதிமூலகிருஷ்ணன்,
//பிரியமானவர்களுக்காக தம்மை வருத்திக்கொள்வதும் மகிழ்வானதுதான்.//
உங்களுக்காவது புரிந்ததே! நல்லது! கொஞ்சம் மன நிம்மதி! :-)

//ஆனால் துணைவர் வருமுன்னரே அவருக்காக இதைச்செய்வது உங்கள் அன்பைக்காட்டிலும் வாழ்க்கை மீதான உங்களின் ரசனையைக் காட்டுகிறது. //
இன்னுமா இந்த உலகம் நம்புது? ;-)

//நிஜத்தில் வந்த பின் என்ன நடக்கும் என நினைத்துப்பார்க்கிறேன்.//
இது ரொம்ப தப்பு! :-)

விந்தைமனிதன் said...

ரொம்ப லேட்ட்ட்ட்ட்டா வர்றேன் போல...! மாப்பைள்ளை கிடைச்சிட்டாரா?
வேறென்னா? பெருமூச்சுதான் வருது

தனுசுராசி said...

ஏன்... !!! ???